கீதவாணி 2026 : Album 08 🎶
JHC OBA Sydney 2026 குழுவினால் ஏற்பாடு செய்யப்பட்ட கீதவாணி 2026, Western Sydney University, Parramatta வளாகத்திலுள்ள Sir Ian & Nancy Turbott Auditorium அரங்கில் வெற்றிகரமாக அரங்கேறியது.
இந்நிகழ்ச்சியின் மூன்றாவது போட்டியாக SENIOR CATEGORY இறுதிப்போட்டி இடம்பெற்றது. பத்திற்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் விண்ணப்பித்திருந்த நிலையில், கீதவாணிக்கு முன்னதாக நடைபெற்ற நேரடி திறன் தேர்வின் மூலம் கீதா துரை, நர்த்தனி ராசேந்திரன், சிவா குணநாயகம் மற்றும் சுதர்சினி ஜெயரட்ணம் ஆகியோர் இறுதிப்போட்டிக்குத் தெரிவாகியிருந்தனர்.
விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் சிவா குணநாயகம் வெற்றியாளராகத் தெரிவானார். 🏆
வெற்றியாளர் மட்டுமன்றி, ஏனைய இரண்டு இறுதிப்போட்டியாளர்களும் மிகச் சிறப்பாகப் பாடி, இப்போட்டியின் தரத்தை மேலும் உயர்த்தியிருந்தனர். போட்டியில் பங்குபற்றிய அனைத்து இளம் திறமையாளர்களுக்கும் எமது மனமார்ந்த பாராட்டுகளும் வாழ்த்துகளும். 👏 🎤
இப்போட்டிக்கான அனுசரணையை வழங்கிய VIM TECH விமல் அவர்களுக்கு எமது மனமார்ந்த நன்றிகள்.
